Search

Oct 27, 2025

உள்ளூர்

களுமுந்தன்வெளி உதைப்பந்தாட்ட போட்டி - பிரதம அதிதியாக இரா.சாணக்கியன்.

களுமுந்தன்வெளி விநாயகன் விளையாட்டு கழகம் உயிர் நீத்த உறவுகளின் ஞாபகார்த்தமாக நடாத்திய உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் காஞ்சிக்குடா ஜெகன் விளையாட்டு கழகம் முதலிடம் பெற்றது.இரண்டாம் இடத்தை சில்லுக்கொடியாறு பராசக்தி விளையாட்டு கழகம் பெற்றுக்கொண்டது.

மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுபற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட களுமுந்தன்வெளி விநாயகன் விளையாட்டு கழகம் உயிர் நீத்த உறவுகளின் ஞாபகார்த்தமாக நடாத்திய உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி ( 27) நேற்று களுமுந்தன்வெளி விநாயகர் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.03 நாட்கள் இப்போட்டி இடம்பெற்றதுடன் 45 அணிகள் பங்குபற்றியதும் குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் மற்றும் போரதீவுபற்று பிரதேச சபை தவிசாளர் விமலநாதன் மதிமேனன், படுவான்கரை உதைப்பந்தாட்ட சம்மேளத்தலைவர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது போட்டியில் முதலிடம், இரண்டாம் பெற்ற அணிகளுக்கு பதக்கங்களும், கிண்ணங்களும், காசோலைகளும் வழங்கி வைக்கப்பட்டது.

இதன் போது பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் ஊடகங்களும் கருத்து தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.


Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All

Home

News

TV

WhatsApp

Home

News

TV

WhatsApp