Search

janani

Apr 5, 2026

உள்ளூர்

சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தினால் சமூக செயற்பாட்டாளர்களுக்கு விருது வழங்கும் நிகழ்வு..!

மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தினால் சமூக செயற்பாட்டாளர்களை கௌரவித்து விருதுகள் வழங்கும் நிகழ்வு நேற்று சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகம், கல்லடி உப்போடை, கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வு சமாதான நீதிவான் சங்கத் தலைவர் திரு. உ. உதயகாந்த் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மதகுருமார்கள் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ரா .சாணக்கியன் இராசமாணிக்கம், ஞா. சிறிநேசன்,வைத்தியர் இ. சிறிநாத், க. பிரபு மேலும் மாநகர முதல்வர் சிவம்பாக்கியநாதன், தென் ஏருவில்பற்று தவிசாளர் வினோராஜ், பிராந்திய சுகாதார பணிப்பாளர் முரளீஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

சமூக சேவையில் சிறந்து விளங்கும் செயற்பாட்டாளர்களை கௌரவிக்கும் இந்நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.மேலும், மட்டக்களப்பு மாநகர முதல்வர் சிவம்பாக்கியநாதன், தென் ஏருவில்பற்று பிரதேச சபை தவிசாளர் வினோராஜ், பிராந்திய சுகாதார பணிப்பாளர் முரளீஸ்வரன் உள்ளிட்ட திணைக்கள அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலரும் இதில் பங்கேற்றனர்.

பல்வேறு துறைகளில் சமூக மேம்பாட்டிற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட தன்னார்வலர்கள் மற்றும் சமூகப் பணியாளர்களை அடையாளப்படுத்தும் நோக்கில் இந்த விருதுகள் வழங்கி வைக்கப்பட்டன. மட்டக்களப்பு மாவட்டத்தின் சமூக ஒருமைப்பாடு மற்றும் வளர்ச்சியை ஊக்குவிக்கும் ஒரு மைல்கல்லாக இந்நிகழ்வு அமைந்திருந்ததாக பங்கேற்பாளர்கள் தெரிவித்தனர்.

சமூக சேவையில் சிறந்து விளங்கும் ஆளுமைகளை கௌரவிப்பதன் ஊடாக, எதிர்கால சந்ததியினரிடையே சமூகப் பற்றை வளர்க்க முடியும் என இதன்போது உரையாற்றிய அதிதிகள் சுட்டிக்காட்டினர்.


Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All