Search

janani

Apr 24, 2026

உள்ளூர்

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு பிணை

லங்கா சதொச நிறுவனத்திற்குச் சொந்தமான லொறியை முறையற்ற வகையில் பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை பிணையில் விடுவிக்க வத்தளை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இன்று வத்தளை நீதவான் காஞ்சனா என். சில்வா முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

இதன்போது, முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை 25,000 ரூபாய் ரொக்கப் பிணை மற்றும் தலா 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான நான்கு சரீரப் பிணைகளில் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டார். 

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All