
janani
Apr 1, 2026
உள்ளூர்
மின்சாரச் சிக்கனமா? திருடர்களுக்கு அங்கீகாரமா? முன்னாள் அமைச்சர் கேள்வி

மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை வீதி விளக்குகளை அணைத்து வைப்பதானது திருடர்களுக்கு வசதி செய்து கொடுக்கும் ஒரு செயற்பாடு என முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பிரதான வீதிகள் மட்டுமன்றி கிளை வீதிகளிலும் விளக்குகள் அணைக்கப்படுகின்றன. இதனால் வீதிகள் கடும் இருளில் மூழ்கியுள்ளன.
திருடர்கள் இருளைப் பயன்படுத்தி குற்றங்களில் ஈடுபட இது வாய்ப்பாக அமைகின்றது." என அவர் சுட்டிக்காட்டினார்.
இரவு 10 மணிக்கு மேல் விளக்குகளை ஒளிரச் செய்வது திருடர்கள் கொள்ளையடித்த பொருட்களைப் பார்ப்பதற்கா? என கேள்வி எழுப்பிய அவர், நிலக்கரி ஊழலில் ஈடுபட்டவர்களை ஜனாதிபதி எவ்வித தயக்கமுமின்றி பாதுகாத்து வருவதாகவும் குற்றம் சாட்டினார்.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All





