
admin
Mar 6, 2026
உள்ளூர்
ஈரானிய கப்பல் விவகாரம் தீவிரம் – ஜனாதிபதி ஆலோசனை

ஈரானுக்குச் சொந்தமான 'IRIS Bushehr' கப்பலை திருகோணமலை துறைமுகத்திற்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
சற்று நேரத்திற்கு முன்னர் ஜனாதிபதி செயலகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஜனாதிபதி, அக்கப்பலில் இருந்த 208 பணியாளர்களை தற்போது கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்து வருவதற்குத் தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது, இலங்கையின் நிலப்பரப்பு, கடல் எல்லைகள் மற்றும் வான்பரப்பு ஆகியவற்றை எந்தவொரு அரசும் மோதல்களின் போது ஒரு தரப்பிற்கு ஆதரவாகப் பயன்படுத்துவதற்கோ அல்லது வேறு நாடுகளுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் பயன்படுத்துவதற்கோ இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி மீண்டும் வலியுறுத்தினார்.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All





