
sath
Apr 20, 2026
உள்ளூர்
நுவரெலியாவுக்கு இந்திய துணைத் தலைவர் விஜயம்

இந்திய குடியரசுத் துணைத் தலைவர் சி. பி. ராதாகிருஷ்ணன் அவர்கள் இன்று (20) காலை நுவரெலியா பகுதிக்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.
இந்திய வம்சாவளி மலையகத் தமிழ் மக்களுக்காக நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இந்திய வீடமைப்புத் திட்டத்தின் பணிகளை நேரில் பார்வையிடுவதற்காக அவர் இந்த விஜயத்தில் இணைந்து கொண்டார்.
இதன்போது, இந்திய குடியரசுத் துணைத் தலைவர் மலையக சமூகத்தினரையும் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.
அத்துடன், நுவரெலியா சீதா அம்மன் கோவிலில் இன்று (20) நடைபெறவுள்ள மத வழிபாடுகளிலும் சி. பி. ராதாகிருஷ்ணன் அவர்கள் கலந்துகொள்ளவுள்ளார்.
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்திய குடியரசுத் துணைத் தலைவர் சி. பி. ராதாகிருஷ்ணன் அவர்கள் நேற்று (19) இலங்கை வந்தடைந்தார்.
இலங்கை வந்தடைந்துள்ள அவர், நேற்று (19) ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோரைச் சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All






