
admin
Apr 21, 2026
உள்ளூர்
குஷ் போதைப்பொருளுடன் இந்தியர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒரு கிலோகிராமிற்கும் அதிக எடையுடைய 'குஷ்' (Kush) போதைப்பொருளுடன் வெளிநாட்டு நாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விமான நிலைய சுங்க அதிகாரிகள் மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் இணைந்து மேற்கொண்ட சோதனையின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 35 வயதுடைய இந்தியப் பிரஜை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All






