
Rebecca
Dec 23, 2025
உள்ளூர்
இந்திய - இலங்கை வெளிவிவகார அமைச்சர்கள் சந்திப்பு!

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இந்த விஜயத்தின் ஒரு அங்கமாக, இந்திய வெளிவிவகார அமைச்சர், இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்த கலந்துரையாடலின் போது, "திட்வா" சூறாவளியால் இலங்கை பாதிக்கப்பட்ட போது முதல் நாடாக விரைந்து வந்து இந்தியா வழங்கிய உதவிகளையும், "சாகர் பந்து" நடவடிக்கையையும் பாராட்டி, மீட்பு பணிகளின் அடுத்த கட்டத்திலும் இந்தியாவின் ஆதரவை எதிர்பார்ப்பதாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.




Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All






