Search

admin

Feb 3, 2026

உள்ளூர்

கிவுல் ஓயா திட்டத்தை செயற்படுத்தினால் 47தமிழர்களின் தொல்லியல் இடங்கள் அழிக்கப்படும்

கிவுல் ஓயாத் திட்டடத்திற்கு எதிராக நேற்று நெடுங்கேணியில் இடம்பெற்ற ஆரப்பாட்ட பேரணியில் பங்கேற்று கருத்துத் தெரிவிக்கும்போது நாடிளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கருத்து தெரிவித்துள்ளார்.

கிவுல் ஓயாத் திட்டத்தைச் செயற்படுத்தினால் தமிழர்களுடைய வரலாற்றைப் பறைசாற்றும் 47தொல்லியல் இடங்கள் அழிக்கப்படும் என சுட்டிக்காட்டிய வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், கடந்தகால அரசு யாப்பாணம் நூலகத்தை எரித்து எவ்வாறு தமிழர்களின் வரலாற்று ஆதாரங்களை அழித்தார்களோ, அதேபோல தற்போதைய அரசு கிவுல் ஓயாத் திட்டத்தைச் செயற்படுத்தி தமிழர்களின் வரலாற்றைப் பறைசாற்றும் 47தொல்லியல் இடங்களை அழிப்பதற்குத் திட்டமிட்டுள்ளதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

எனவே யாழ் நூலக எரிப்பின் தொடர்சியாகவே இந்த கிவுல் ஓயாத் திட்டத்தினைதாம் பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

மணலாறு என்பது தமிழர்களின் இதய பூமியாகும். அத்தகைய தமிழர்களின் இதயபூமியான மணலாற்றில் மகாவலி அதிகாரசபையினால் திட்டமிட்டவகையில் சிங்களக்குடியேற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், வெலிஓயா என பெபயரும் மாற்றப்பட்டுள்ளது.

அதன் தொடர்ச்சியாக தற்போது மகாவலி (எல்)வலயத்தின் கிவுல் ஓயாத் திட்டத்தினூடாக வவுனியா வடக்கு மற்றும் முல்லைத்தீவுமாவட்டங்களிலுள்ள தமிழர்களின் பூர்வீக கிராமங்கள்,வயல்நிலங்கள், களங்கள் என்பன ஆக்கிரமிக்கப்பட்டு இனப்பரம்பல் கோலத்தை மாற்றியமைக்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

குறிப்பாக ஏற்கனவே குடியேற்றப்பட்ட பெரும்பான்மையினக் குடும்பங்களே குடும்பங்களுமாக மொத்தம் 6000பெரும்பான்மையினக் குடும்பங்களே இந்த கிவுல் ஓயாத் திட்டத்தினூடாக பயனடையவுள்ளதாக கிவுல் ஓயாத் திட்ட அறிக்கையிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே இத்திட்டத்தின் மூலம் தமிழ் மக்களுக்கு எவ்வித பயன்களுமில்லை. தமிழ்மக்களுடைய பூர்வீக மணலாற்றை ஆக்கிரமித்து குடியேற்றப்பட்டுள்ள மற்றும் குடியேற்றப்படவுள்ள பெரும்பான்மை இனத்தவர்களை பொருளாதார ரீதியாக வளப்படுத்துவதற்காகவே இத்திட்டம் மேற்கொள்ளப்படுகின்றது.

எனவே இத்திட்டத்தின் மூலம் தமிழ் மக்களுக்கு எவ்வித பயன்களுமில்லை. தமிழ்மக்களுடைய பூர்வீக மணலாற்றை ஆக்கிரமித்து குடியேற்றப்பட்டுள்ள மற்றும் குடியேற்றப்படவுள்ள பெரும்பான்மை இனத்தவர்களை பொருளாதார ரீதியாக வளப்படுத்துவதற்காகவே இத்திட்டம் மேற்கொள்ளப்படுகின்றது.

தமிழ் மக்களின் பூர்வீக மணலாற்றினை ஆக்கிரமித்துள்ளதோடு நின்றுவிடாமல் அங்கு குடியேற்றப்பட்ட மற்றும் குடியேற்றப்படவிருக்கின்ற எவ்வித நிலத்தொடர்புமற்ற பெரும்பான்மையினத்தவர்களை வலுப்படுத்துவதற்கான நோக்கத்தினை மாத்திரம் கருத்திற்கொண்டே இந்த கிவுல் ஓயாத் திட்டத்தை செயற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.


இவ்வாறு சிங்களக்குடியேற்றங்களை அதிகளவில் மேற்கொண்டு, அவ்வான குடியேற்றவாசிகளை எமது பகுதிகளில் தொடர்ந்து நிலைகொள்ளச்செய்வதற்காக இவ்வாறான திட்டங்களை மேற்கொள்வதன்மூலம் இனப்பரம்பல் கோலத்தை மாற்றியமைக்க முயல்கின்றார்கள். அதாவது எமது பூர்வீக நிலங்களில் எம்மை சிறுபான்மையினராக ஆக்குவதற்கு முயற்சிக்கின்றார்கள் .

அத்தோடு குறித்த கிவுல் ஓயாத் திட்டத்தைச் செயற்பாடுத்தினால் வவுனியா வடக்கில் இருக்கின்ற தமிழ் மக்களின் பூர்வீக இராமன்குளம், கொட்டோடைக்குளம், ஒயாமடுக்குளம், வெள்ளான்குளம், பெரியகட்டுக்குளம், பனிக்கல்மடுக்குளம், சன்னமுற்றமடுக்குளம், கம்மாஞ்சிக்குளம், குறிஞ்சாக்குளம், புலிக்குட்டிக்குளம், திரிவைச்சகுளம் முதலான சிறியநீர்ப்பாசனக்குளங்களும், அவற்றின் கீழான வயல்காணிகளும், வெடிவைச்சகல்லு குளத்தின்கீழ்வரும் வயல்காணிகள் பகுதியளவிலும், நாவலர்பாம், கல்லாற்றுக்குளம், ஈச்சன்குளம், கூழாங்குளம் வயற்காணிகளும் வவுனியா வடக்கிலுள்ள பழந்தமிழ் கிராமங்களான காட்டுப்பூவரசங்குளம் கிராமம், காஞ்சூரமோட்டை கிராமம், மருதோடைக் கிராமத்தின் ஒருபகுதிபோன்ற தமிழ் மக்களின் பூர்வீக குளங்களும், வயல்நிலங்களும், கிராமங்களும் நீரேந்துப்பகுதிகளுக்குள் மூழ்கிப்போகும் நிலை ஏற்படும்.

எனவதான் தமிழ் மக்களின் பூர்வீக பகுதிகளை ஆக்கிரமித்து மேற்கொள்ளப்படும் இவ்வாறான திட்டங்களை கடுமையாக எதிர்க்கின்றோம். அரசினால் மேற்கொள்ளப்படும் இத்தகைய செயற்பாடுகளை மிகமோசமான கீழ்த்தரமான செயற்பாடுகளாகவே காண்கின்றோம்.

மேலும் இந்த கிவுல் ஓயாத் திட்டத்தினை செயற்படுத்தினால், அந்த இடங்களிலுள்ள தமிழர்களின் வரலாற்றுத் தொன்மையைப் பறைசாற்றும் 47தொல்லியல் இடங்களில் பெருமளவானவை நீரில் மூழ்குவதுடன், அழித்தொழிக்கப்படும்.

குறிப்பாக ஈழத்தில் தமிழர்களின் வரலாற்று தொன்மைகளையும், ஈழத்திற்கும் தமிழர்களுக்குமிடையிலான வரலாற்றுத் தொடர்புகளையும் இல்லாமல் செய்வற்காக கடந்தகால பேரினவாத அரசாங்கமானது தமிழர்களின் வரலாற்று நூலாதாரங்களால் நிறைந்திருந்த யாழ்ப்பாணம் நூலகத்தினை எரியூட்டினார்கள்.

அதேபோல தற்போதைய இந்த அரசு கிவுல் ஓயாத் திட்டத்தைச் செயற்படுத்தி தமிழர்களின் வரலாற்றுத் தொன்மைகளைப் பறைசாற்றும் இந்த 47தொல்லியல் இடங்களையும் அழிப்பதன்மூலமாக வன்னிக்கும் தமிழர்களுக்குமிடையிலான நீண்டகாலாவரலாற்றுத் தொடர்பை அழிக்க முயல்கின்றனர்.

எனவே நாம் எமது பூர்வீக நிலங்களைத் தக்கவைக்கவேண்டுமெனில் நாம் போராடியேயாகவேண்டும்.

அம்பாந்தோட்டையிலோ மாத்தறையிலோ காணிகளை பெறுவதற்காக நாம் இங்கு போராட்டத்தை மேற்கொள்ளவில்லை. எமது தமிழர்களின் பூர்வீக தமிழர்தாயகத்தில் இடம்பெறும் திட்டமிடப்பட்ட நில ஆக்கிரமிப்புக்களுக்கு எதிராகவே போராடுகின்றோம்.

இந்தக் கிவுல் ஓயாத் திட்டத்திற்காக பாரிய அளவில் அடர்வனங்களை அழிப்பதன்மூலம் எமக்கும் காட்டு யானைகளுக்கும் மோதல்களை உருவாக்கவும் முனைகின்றனர். இவ்வாறு காட்டுயானைகளுக்கும் எமக்கும் மோதல்களை ஏற்படுத்த முயலாதீர்கள். முடியுமானால் நீங்கள் வாருங்கள் மோதிப்பார்க்கலாம் - என்றார்.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All