Search

janani

Mar 30, 2026

உள்ளூர்

அடையாள அட்டை வழங்கும் பணிகள் இன்று முதல் மீள ஆரம்பம்

இடைநிறுத்தப்பட்டிருந்த தேசிய அடையாள அட்டை வழங்கும் பணிகள் இன்று முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஆட்பதிவுத் திணைக்களத்தின் கணினி கட்டமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சினை காரணமாக அண்மையில் தேசிய அடையாள அட்டைகளை விநியோகிக்கும் பணிகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன

அதன்படி, கடந்த 23, 24 மற்றும் 26 ஆம் திகதிகளில் ஒரு நாள் சேவை ஊடாக தேசிய அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொள்ள வருகை தந்து அதனைப் பெற்றுக்கொள்ள முடியாது போனவர்களுக்கு இன்று தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்படவுள்ளன.

அதற்கமைய, பத்தரமுல்லையில் உள்ள தலைமை அலுவலகம் மற்றும் மாகாண அலுவலகங்களில் இந்த செயற்பாடுகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All