
janani
Apr 26, 2026
உள்ளூர்
தட்டம்மை பரவல் குறித்து சுகாதாரத் துறை எச்சரிக்கை !

நாட்டில் தட்டம்மை நோயற்ற நிலையைத் தக்கவைப்பதில் சவால் ஏற்பட்டுள்ள நிலையில், கொழும்பு மாவட்டத்தில் வெளிநாட்டிலிருந்து வருகை தந்த இருவருக்கு தட்டம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
குடும்ப சுகாதாரப் பணியகம் (FHB) அண்மையில் நடத்திய ஊடக சந்திப்பின் போது இந்தத் தகவல்கள் வெளியிடப்பட்டன.
இது தொடர்பாக தொற்றுநோயியல் பிரிவின் ஆலோசகர் வைத்தியர் அத்துல லியனபத்திரண கருத்துத் தெரிவிக்கையில்:
இந்தத் தொற்றானது வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வந்துள்ளதே தவிர, 2023 ஆம் ஆண்டு நாட்டில் நிலவிய தட்டம்மை பரவலுடன் தொடர்புடையது அல்ல.
ஆய்வகப் பரிசோதனைகள் மற்றும் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனைகள் மூலம் இது உறுதி செய்யப்பட்டுள்ளது.பாதிக்கப்பட்ட இருவரும் தட்டம்மைக்கான (MMR) தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளாதவர்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All





