Search

Rebecca

Feb 2, 2026

உள்ளூர்

ஹட்டன் மக்கள் மாநாடும் பிரகடனம் வெளியீடும்

ஹட்டன் மக்கள் மாநாடும் பிரகடனம் வெளியீடும் எனும் கருப்பொருளில் நிகழ்வொன்று சம உரிமை இயக்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

'காணி, வீடு, மாதச் சம்பளம், குடியுரிமை ஆகிய உரிமைகளை வெற்றிக்கொள்ளும் ஆண்டு 2026!" மற்றும் மலையகத் தமிழ் மக்களே, தளராது போராடுவோம்! எனும் தொனிப்பொருளின் கீழ் 'சம உரிமை இயக்கம்" மற்றும் 'சமூக நீதிக்கான மலையக வெகுஜன அமைப்பு" ஆகியவற்றின் ஒருங்கிணைப்பில், அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் மற்றும் பல செயற்பாட்டாளர்களின் பங்களிப்புடன் இந்த மக்கள் மாநாடு நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வு ஹட்டன் கிருஷ்ண பவன் கலாச்சார மண்டபத்தில் 2026 பெப்ரவரி மாதம் 04ஆம் திகதி முற்பகல் 10.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இதில் மாநாட்டை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள், சமூக அமைப்புக்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் கருத்துக்களை வழங்கவுள்ளதுடன், தோட்டத் தொழிலாளர்கள் உள்ளிட்ட மலையகத் தமிழ் மக்களின் கோரிக்கைகளை உள்ளடக்கிய மாநாட்டு பிரகடனமும் அன்றைய தினம் வெளியிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All