Search

Rebecca

Dec 19, 2025

உள்ளூர்

மகிழ்ச்சியான கல்வியைத் தரும் களம் அவசியம் – பிரதமர்

அனைத்து மாணவர்களும் மகிழ்ச்சியாக கல்வியைத் தொடரக்கூடிய சுதந்திரமான சிந்தனைக்கு இடமளிக்கும் தளமாக பல்கலைக்கழகம் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களை மாற்றியமைக்கவுள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழகங்களுக்குள் பகிடிவதை உட்பட அனைத்து வகையிலான துன்புறுத்தல்களையும் தடுத்தல் மற்றும் போதைப்பொருளை ஒழித்தல் தொடர்பில் தெளிவுபடுத்தும் நிகழ்வொன்று நேற்றைய தினம் கல்வியமைச்சில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கீழ் செயற்படும் பல்கலைக்கழங்கள், கல்வியமைச்சின் கீழுள்ள உயர் கல்வி நிறுவனங்கள் உட்பட தொழிற் பயிற்சி நிறுவனங்கள், பிக்குமார் சங்கம் என்பவற்றின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

துன்புறுத்தல்கள், வன்முறை உட்பட போதைப்பொருள் பாவனையற்ற உளச் சுகாதாரத்துடன் கூடிய சுதந்திர சூழலொன்றை பல்கலைக்கழகங்களில் உருவாக்குவதே திட்டத்தின் நோக்கமாகும்.

Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All