
janani
Apr 3, 2026
உள்ளூர்
கடற்றொழிலாளர்களின் வாழ்வாதார பாதுகாப்புக்கு அரசு புதிய விசேட திட்டம்!

கடற்றொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், புதிய காப்புறுதித் திட்டமொன்றை விவசாய மற்றும் விவசாயக் காப்புறுதிச் சபை அறிமுகப்படுத்தியுள்ளது.
அரசாங்கத்தின் மீன்பிடி கொள்கை முன்மொழிவுகளுக்கு அமைய, கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் நோக்குடன் இந்த விசேட திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
கடற்றொழிலாளர்கள் தங்களின் வசதிக்கு ஏற்ப பல்வேறு திட்டங்களின் கீழ் இந்த காப்புறுதியைப் பெற்றுக்கொள்ள முடியும்.கடற்றொழிலாளர்கள் மீன்பிடி நடவடிக்கைகளின் போது உயிரிழப்பு ஏற்பட்டால், தெரிவு செய்யப்பட்ட திட்டத்தின் அடிப்படையில் பின்வரும் இழப்பீடுகள் வழங்கப்படும்.
12 இலட்சம் ரூபாய் இழப்பீடு: இதற்காக மீனவர் ஆண்டுக்கு 1,920 ரூபாய் செலுத்த வேண்டும்.15 இலட்சம் ரூபாய் இழப்பீடு: இதற்காக ஆண்டு சந்தாவாக 2,550 ரூபாய் செலுத்தப்பட வேண்டும்.20 இலட்சம் ரூபாய் இழப்பீடு: அதிகபட்ச இழப்பீடான 20 இலட்சத்தைப் பெறுவதற்கு, ஆண்டுக்கு 3,600 ரூபாய் செலுத்த வேண்டும்.
இதேவேளை உயிரிழப்புகளுக்கு மட்டுமன்றி, தொழில் ரீதியாக எதிர்கொள்ளும் ஏனைய சவால்களுக்கும் இத்திட்டம் உதவியாக அமையும் என சபை தெரிவித்துள்ளது:
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All





