
janani
Mar 25, 2026
உலகம்
எரிபொருள் விலை உயர்வு : அவசர கால எண்ணெய் இருப்பை விடுவிக்க IEA தயார்

மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழலால் சர்வதேச சந்தையில் எரிபொருள் விலைகள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, அவசரத் தேவைகளுக்காகச் சேமித்து வைக்கப்பட்டுள்ள மேலதிக மசகு எண்ணெய் இருப்புகளை விடுவிக்கத் தயாராக இருப்பதாக சர்வதேச எரிசக்தி முகவரகம் தலைவர் பாத்திப் பிரோல் தெரிவித்துள்ளார்.
டோக்கியோவில் ஜப்பானியப் பிரதமருடனான சந்திப்பின் பின்னர் கருத்துத் தெரிவித்த பாத்திப் பிரோல், இரண்டாவது தடவையாக அவசர எண்ணெய் விடுவிப்புக்குத் தயாராகுமாறு ஜப்பான் விடுத்த கோரிக்கையை ஏற்றுக்கொள்வதாகக் குறிப்பிட்டார்.
ஹோர்முஸ் நீரிணை ஊடான கப்பல் போக்குவரத்து பகுதியளவில் முடக்கப்பட்டுள்ளதால், உலகளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டு விலைகள் உச்சத்தைத் தொட்டுள்ளன.
எமது கையிருப்பில் இன்னும் 80 சதவீதமானவை மீதமுள்ளன. எப்போது தேவையோ அப்போது அவற்றை விடுவிக்க நாங்கள் தயாராக உள்ளோம்," என அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
எவ்வாறாயினும், உலகம் தற்போது ஒரு பாரிய எரிசக்தி பாதுகாப்பு அச்சுறுத்தலை எதிர்நோக்கி வருவதாக அவர் இதன்போது எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All





