
admin
Feb 6, 2026
உள்ளூர்
பொலிஸ் நிலைய முன்னாள் பொறுப்பதிகாரியும் கான்ஸ்டபிள் ஒருவரும் கைது

சூரியகந்த பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரியும் கான்ஸ்டபிள் ஒருவரும் மத்திய குற்றப்புலனாய்வுப் பணியகத்தினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மான் ஒன்றைக் கொன்றமை தொடர்பான குற்றச்சாட்டின் கீழ் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வூட்லர் தெரிவித்தார்.
வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தை மீறியமைக்காக இவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகநபர்கள் நாளை எம்பிலிபிட்டிய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், மத்திய குற்றப்புலனாய்வுப் பணியகம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All






