Search

Nivin

Aug 27, 2025

உள்ளூர்

முன்னாள் ராணுவத்தளபதி- மீண்டும் விளக்கமறியலில்.

முன்னாள் ராணுவத்தளபதி உலுகேதென்ன மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

ஒருவர் காணாமல் போன சம்பவம் தொடர்பில் கைதுசெய்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் கடட்படைத்தளபதியை செப்டெம்பர் 10ஆம் திகதிவரை மேலும் விளக்கமறியலில் வைக்க பொல்கஹவெல நீதவான் பி,பி,ஜி.பெர்னாண்டோ இன்று உத்தரவிட்டார்.

ஆகஸ்ட் 26,2010 அன்று பொத்துஹர காவல்நிலையத்தில் இருந்தபோது அளவ்வ பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட ஜெனரல் சாந்த சமரவீர கடத்தப்பட்டு கண்கள் கட்டப்பட்டு ,ஒரு வேனில் திருகோணமலை கடற்படை தளத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு ஒரு நிலத்தடி பதுங்ககுளியில் வைக்கப்பட்டார்.

அப்போது கடட்படை புலனாய்வு பிரிவின் தலைவராக பணியாற்றிய தமித் நிஷாந்த சிரிசோம உலுக்கேதென்ன கொழும்பில் இருந்து திருகோணமலை கடட்படைத்தளத்திற்கு சென்றிருந்தார்.

அந்த நேரத்தில் கைதுசெய்யப்பட்டு நிலத்தடி பதுங்கக்குழியில் வைக்கப்பட்டிருந்த விடுதலைப்புலி உறுப்பினர்கள் என்று கூறப்படும் இழைஞர்கள் குழு குறித்து விசாரணைகள் நடத்தப்பட்டுவருவதாகவும் அளவ்வ போலீசாரால் கைதுசெய்ப்பட்ட நபரும் அந்த பதுங்கக்குழிக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் குற்றபுலனாய்வுத்துறை நீதிமன்றத்தில் தெரிவித்தது.

இந்த காணாமல் போனோர் சம்பவம் தொடர்பாக முன்னாள் கடடபடைத்தளபதி உற்பட 11 பேர் கைதுசெய்யப்பட்டு கடந்த 30ஆம் தேதி பொல்கஹவெல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர் முதல் 9வது சந்தேகநபர் வரை ஜாமினில் விடுவிக்கவும் 10வது சந்தேக நபரும் 11 வது சந்தேகநபருமான முன்னாள் கடடபடைத்தளபதி தமித் நிஷாந்த சிரிசோம உலுக்கேதென்னவை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடபட்டது.

Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All

Home

News

TV

WhatsApp

Home

News

TV

WhatsApp