
janani
Apr 9, 2026
உள்ளூர்
தேயிலை உற்பத்தியாளர்களுக்கு QR குறியீடு மூலம் உர மானியம்

இலங்கையில் தேயிலை உற்பத்தியாளர்களுக்கு உர மானியங்களை வழங்கும் முறைமையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய QR குறியீடு முறையானது, உர விநியோகத்தில் பாரிய வளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த QR முறையினூடாக விவசாயிகளுக்கு 50 கிலோ கிராம் உர மூடை ஒன்றிற்கு 2,000 ரூபா நிதி மானியம் நேரடியாக வழங்கப்படுகிறது.
கடந்த 2024/2025 முழு ஆண்டிலும் 84,472 விவசாயிகள் மாத்திரமே மானிய உரத்தைப் பெற்றிருந்தனர். ஆனால், புதிய QR முறைமை அறிமுகப்படுத்தப்பட்ட கடந்த 6 மாத காலப்பகுதிக்குள் மட்டும் 187,759 விவசாயிகள் உரத்தைப் பெற்றுள்ளனர். இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 122.3 வீத வளர்ச்சியாகும்.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All





