Search

Rebecca

Jan 30, 2026

உள்ளூர்

4 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்களுடன் குடும்பஸ்தர் கைது

சுமார் 4 கோடி பெறுமதியான போதைப்பொருட்களை சூட்சுமமாக கடத்தி வந்த சந்தேகநபரை பெரிய நீலாவணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியின் ஊடாக கொழும்பில் இருந்து கல்முனை வழியாக சம்மாந்துறை பகுதிக்கு சென்ற அதி சொகுசு பேரூந்து ஒன்றில் இக்கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

பெரிய நீலாவணை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரிக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய நேற்று அதிகாலை கொழும்பு-கல்முனை அதி சொகுசு பேரூந்து சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது அக்கரைப்பற்று பகுதியை சேர்ந்த 49 வயது மதிக்கத்தக்க சந்தேக நபரான குடும்பஸ்தர் பயணப் பை ஒன்றில் சூட்சுமமாக கொண்டு வந்திருந்த 4 கோடி ரூபா பெறுமதியான பல்வேறு வகையான போதைப் பொருட்களுடன் கைதானார்.

குறித்த சந்தேக நபர் கொண்டு வந்த போதைப்பொருட்களில் குஷ், கேரளா கஞ்சா, ஐஸ் ,ஹெரோயின், உட்பட 4 வகையான போதைப்பொருட்கள், 2 தொலைபேசிகள் ஒரு தொகை பணம் மா டின் என்பன நீலாவணை பொலிஸாரால் மீட்கப்பட்டிருந்தன.

குறித்த சோதனை நடவடிக்கையின் போது பெரிய நீலாவணை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி உட்பட பொலிஸ் சார்ஜெண்டுகள் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All