
janani
Mar 25, 2026
உள்ளூர்
மீகஸ்வெவவில் பரபரப்பு : சிசுவின் சடலம் மீட்பு

மீகஸ்வெவ, பள்ளியகொடல்ல பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றிலிருந்து பெண் சிசு ஒன்றின் உடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மீகஸ்வெவ காவல்துறை நிலையத்திற்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் சிசுவின் உடலத்தை மீட்டனர். முதற்கட்ட விசாரணைகளின்படி, அந்த பெண் சிசு உயிரிழந்து சுமார் இரண்டு நாட்கள் இருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது.
சம்பவம் இடத்திற்கு வருகை தந்த நீதவான், ஆரம்பக்கட்ட விசாரணைகளை முன்னெடுத்தார். இதனைத் தொடர்ந்து, மரணத்திற்கான துல்லியமான காரணத்தைக் கண்டறிவதற்காக சிசுவின் உடலம் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளது.
உயிரிழந்த நிலையில் சிசு மீட்கப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All





