
Rebecca
Feb 3, 2026
உள்ளூர்
தோட்ட தொழிலாளர்களின் 5 மாத சம்பளத்தை சூரையாடிய தோட்ட முகாமையாளர்

மாத்தளை மிட்லன் டொப் டிவிசன் ரத்தோட்டை தோட்ட தொழிலாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் ஒன்றை நேற்று முன்னெடுத்திருந்தனர்.
குறித்த தோட்டத்தில் தொழில் செய்யும் தொழிலாளர்களின் 5 மாதமாக பெயர் பதிந்து அந்த பணத்தை தனது சொந்த தேவைக்காக தோட்ட முகாமையாளர் சூரையாடியுள்ளார்.
மேலும் 1 மாதம் மூன்று தொழிலாளர்களின் பெயர் பதிந்து தனது நண்பர்களுடன் குடிப்பதற்கு அந்த பணத்தை எடுத்து சூரையாடியுள்ளார்.
இது தொடர்பாக தோட்ட மக்களுக்கு தெரியவந்ததை அடுத்து நேற்று தோட்ட தொழிலாளர்கள் பனிபகிஷ்கரிப்பு செய்து போராட்டம் செய்து உள்ளனர்.
சம்பந்தப்பட்ட உரிய அதிகாரிகள் இது தொடர்பாக கவனம் செலுத்தி தோட்ட முகாமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி வருகின்றனர்.

Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All






