Search

Rebecca

Jan 8, 2026

உள்ளூர்

மின்சாரத் தடை ஏற்படலாம் : கிழக்கு மாகாண மக்களுக்கு அறிவுறுத்தல்!

வங்காள விரிகுடாவின் தென்கிழக்காக உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் கிழக்கு மாகாணத்தில் பல பகுதிகளில் இன்று 08ஆம் திகதி தொடக்கம் எதிர்வரும் 10ஆம் திகதிவரை 100 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி 60 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

எனவே, மின்தடை ஏற்படக்கூடிய வாய்ப்பு ஏற்படும் என்பதால் மக்கள் அதற்குத் தேவையான விதத்தில் தயார் நிலையில் இருக்குமாறு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

சீரற்ற காலநிலை தொடர்பாக அரசாங்க அதிபர் இன்று (08)அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

எனவே, வானிலை தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All