
Rebecca
Jan 29, 2026
உள்ளூர்
வரட்சியான வானிலை நீடிப்பு

நாட்டின் அநேகமான பகுதிகளில் இன்றும் மழையில்லாத வானிலையே நிலவுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனால் நாட்டில் தற்போது நிலவும் வரட்சி நிலையில் நீடிப்பு காணப்படும்.
மேல், சப்ரகமுவ, வடமேல், மத்திய மாகாணங்களிலும் , பதுளை, காலி, அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களிலும் காலை வேளையில் அதிக பனிமூட்டம் நிலவக்கூடும்.
காற்றானாது வடகிழக்கு திசை நோக்கி வீசும்.
இதேவேளை களுத்துறையிலிருந்து கொழும்பு மற்றும் புத்தளம் ஊடாக மன்னார் வரையிலும், மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலுமான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடற்பகுதிகளில் அவ்வப்போது அலைதாக்கம் அதிகரிக்கும்.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All






