
janani
Apr 1, 2026
உள்ளூர்
கடனுக்காகக் கையேந்தாதே , தேசிய நலன்புரித் திட்டங்களை உடனே தொடங்கு !

அரசாங்கம் சர்வதேச நிதி நிறுவனங்களின் பிடியில் சிக்கி அடிமையாகாமல், உடனடியாக மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்கான தேசிய நலன்புரித் திட்டங்களை ஆரம்பிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று வௌியிட்டுள்ள விசேட அறிவிப்பில் குறித்த விடயத்தை வௌிப்படுத்தியுள்ளார்.
அரசாங்கம் சர்வதேச நிதி நிறுவனங்களின் பிடியில் சிக்கி அடிமையாகாமல், உடனடியாக மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்கான தேசிய நலன்புரித் திட்டங்களை ஆரம்பிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார். விசேட கூற்றொன்றை முன்வைத்து உரையாற்றிய போதே அவர் இதனை இன்று தெரிவித்துள்ளார்.
"எண்ணெய் விலை மற்றும் மின்சாரக் கட்டணங்கள் மீண்டும் அதிகரிக்கப்படவுள்ளதால் 2 கோடியே 20 இலட்சம் மக்களும் சொல்லொணாத் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாக, ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் பாதுகாப்பு அற்ற நிலையில் உள்ள குழந்தைகள், சிறுவர்கள் மற்றும் தாய்மார்களுக்காக ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்துடன் (UNICEF) கலந்தாலோசித்து விசேட வேலைத்திட்டமொன்றை அரசாங்கம் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்" என அவர் வலியுறுத்தினார்.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All





