Search

Rebecca

Feb 11, 2026

உள்ளூர்

பிமல் வவுனியாவில் கேள்வி

இங்குள்ள ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பாடசாலைக்கு செல்லவில்லையோ என தோன்றுகிறது என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

வவுனியா - கூமாங்குளம், அலகரை வீதியினை நேற்று புனரமைப்பதற்கான ஆரம்ப வேலையினை ஆரம்பித்து வைத்த பின்னர் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

நாங்கள் தேர்தலிற்காக வீதியினை செய்து தரவில்லை, மாறாக மக்களின் போக்குவரத்திற்காகவே செய்து தரவுள்ளோம். நாம் கிராமிய வீதி அமைப்புக்கள் உருவாக்கப்பட வேண்டும் என அமைச்சரவை தீர்மானம் எடுத்துள்ளோம்.

இவ்வமைப்பானது குறித்த வீதி உரிய முறையில் மேற்கொள்ளப்படுகின்றதா என்பதை பார்வையிடுவதே பிரதான பணியாக இருக்கும். எனவே இக்கிராமத்திலும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் ஒழுங்குபடுத்தலில் விரைவாக அவ்வமைப்பை உருவாக்கவும்.

மிகவும் பழுதடைந்த நிலையில் காணப்பட்ட வீதிகளையே நாம் அமைக்கின்றோம். முப்பது வருடம் யுத்தத்திலே பாதிப்படைந்த மக்கள் என்ற ரீதியில் வடமாகாணத்திற்கு ஜனாதிபதி அதிகளவான நிதியினை ஒதுக்கியுள்ளளார்.

டித்வா புயலினை காரணமாக அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மேற்கொள்ள முடியாது என்ற காரணத்தை நாம் கூறியிருக்கலாம். ஏழை எளிய மக்களிற்கு உதவி செய்வதற்காகவே ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசினை அமைத்துள்ளோம்.

மேலும் நாம் வழங்கிய வாக்குறுதிகளை முழுமையாக செய்து வருகின்றோம். திருட்டு, கொள்ளை, மோசடிகளை இல்லாது அழிப்பதாக அரசியல் ரீதியாக தெரிவித்திருந்தோம். இவ்வாறான மோசடிகளில் நூறு வீதம் அரசோ, அரச அமைச்சர்களோ, பாராளுமன்ற உறுப்பினர்களோ ஈடுபடவில்லை. இருந்தாலும் கூட எதிர்க்கட்சித்தலைவர் பாராளுமன்றத்தில் பல போலியான குற்றச்சாட்டுக்களை தெரிவிக்கின்றார். இது தொடர்பாக எங்களுக்கு எதிராக வழக்கோ அல்லது பிரேரணையோ கொண்டு வாருங்கள் என தெரிவித்தோம், ஆனால் எதையும் அவர் செய்யவில்லை. குறிப்பாக பாராளுமன்றத்தில் கூறும் பொய்களிற்கு நாம் வழக்கு தாக்கல் செய்ய முடியாது.

நாம் மோசடி மற்றும் வீன் விரயத்தை இல்லாது ஒழிப்போம். குறிப்பாக கடந்த காலங்களில் ஒரு நிகழ்விற்கு அதிகளவான செலவு மேற்கொள்ளப்படும். ஆனால் நாம் அவ்வாறான செலவுகளை குறைத்து மிச்சப்படுத்தியுள்ளோம்.

மேலும் கடந்த காலங்களிலே உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டவர்கள் தங்களது உறவுகள் அனைவருக்கும் வேலையை பெற்றுக்கொடுப்பார்கள். ஆனால் நாங்கள் அவ்வாறு வழங்கவில்லை. கடந்த காலங்களில் பாராளுமன்ற உறுப்பினர்களே இவ் ஒப்பந்த வேலைகளை மேற்கொண்டனர்.

இவ்வீதியானது 550 இலட்சம் ரூபாய்க்கு மதிப்பீடு செய்து கேள்வி கோரல் பத்திரம் தாக்கல் செய்திருந்தோம். குறித்த ஒப்பந்தத்தை 385 இலட்சம் ரூபாய்க்கு ஒரு ஒப்பந்தகாரர் எடுத்துள்ளார். இதன் மூலமாக 165 இலட்சம் ரூபாய் மிச்சப்படுத்தியுள்ளோம். மொட்டுக்கட்சி அரசோ அல்லது சஜபே அரசாங்கமாக இருந்திருந்தால் குறித்த 165 இலட்சம் ரூபாயும் பைகளிற்குள் சென்றிருக்கும். இதேபோன்று வடக்கு மாகாண சபையிலும் பெரிய மாற்றமென்பதற்கு இல்லை. குறிப்பாக கடந்த மாகாண சபையிலே இரு அமைச்சர்களை வடமாகாண முதலமைச்சர் நீக்கியிருந்தார்.

இனவாதம் இல்லாத அரசினை உருவாக்குவோம் என ஜனாதிபதி வாக்குறுதி வழங்கியுள்ளார். நீங்கள் தமிழர் என்பதால் இந்த அரசினால் அநீதி இழைக்கப்பட்ட உள்ளதா என கேட்கிறேன். பல வருட காலமாக இந்நாட்டிலே ஒரு பிரச்சனை ஒன்று இருக்கின்றது என்று எங்களுக்கு தெரியும். அதனை தீர்த்து வைக்க வேண்டிய தேவை இருக்கின்றது. பெரும்பாலான பிரச்சினைகள் தமிழ்இ சிங்களஇ முஸ்லீம்கள் என்ற ரீதியில் இல்லை.

குறிப்பாக பணம் இருந்தால் மூவினத்தவர்களும் சந்தோசமாக உள்ளனர். ஆனால் பணம் இல்லை எனின் இது கஷ்டமாகும். வாக்குறி வழங்கிய விடயங்களை ஒவ்வொன்றாக அரசாங்கம் என்ற ரீதியில் மேற்கொள்ள வேண்டும்.

கல்வி சீர்திருத்தம் தொடர்பாக தெரிவித்திருந்தோம், அதனை தற்போது ஆரம்பித்துள்ளோம். இங்குள்ள ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பாடசாலைக்கு செல்லவில்லையோ என தோன்றுகிறது. குறிப்பாக தமிழரசுக் கட்சியில் ஒருவரே அப்படி இருக்கின்றார்இ மற்றவர்கள் கொஞ்சம் பரவாயில்லை.

நாம் மேற்கொண்ட கல்வி சீர்திருத்த விடயத்தில் இவர்கள் மேற்கொண்ட செயலினால் தரம் 06 இற்கான வகுப்பினை இவ்வருடம் ஆரம்பிக்க முடியாமல் போய்விட்டது. இருந்த போதும் நாம் கல்வி சீர்திருத்தத்தை மேற்கொள்வதற்கு ஆரம்பித்தோம். நாம் மக்களின் குறைகளை நிவர்த்தி செய்யும் அரசினை அமைத்துள்ளோம்.

கடந்ந நாட்களாக அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் போராட்டம் இடம்பெற்றது. இந்நிலையில் ஜனாதிபதிக்கும் அவர்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையின் போது அவர்களை ஆசிரியர்களாக உற்வாங்குவதற்கான பிரமானத்தின் அடிப்படையில் ஜனாதிபதி சம்மதம் தெரிவித்துள்ளார்.

வடமாகணததிலே படையினர் மற்றும் அரசின் கீழ் உள்ள காணிகளை தேவையின் அடிப்படையில் பாதுகாப்பு படையினரின் சம்மதத்துடன் மீளவும் பொதுமக்களுக்கு வழங்கவுள்ளோம்.

60 மாதங்கள் பணியாற்றுவதற்காக எமது அரசாங்கம் அமைக்கப்பட்டுளளது. கடந்த காலங்களிலே அரசாங்கங்கள் வழங்கிய நிதியை விட தற்போது டித்வா சூறாவளியால பாதிக்கப்பட்ட மக்களிற்கு பெருமளவான நிதியினை வழங்கியுள்ளோம். குறிப்பாக எமது அரசாங்கத்தினால் பணத்தினை மிதப்படுத்தியமையாலே வழங்க முடிந்தது.

மேலும் வறுமைக்குட்பட்ட மக்களின் தன்மையை அறிந்து கொள்ளக்கூடிய ஜனாதிபதி இருப்பதனால் இது நடந்தது. குறிப்பாக டித்வா புயலில் அழிவடைந்த வீடுகளிற்கு ஐம்பது இலட்சம் வழங்கவுள்ளார் என்பதை எங்களால் கூட நம்ப முடியாது இருந்தது.

ஒரு வீட்டினை மட்டும் உள்ளவர்களின் வீடுகள் அழிவடையும் போது அவர்களின் மனநிலை எவ்வாறு இருக்கும் என்று எங்களிற்கு புரியும். இது வவுனியாவில் ஒரு வீடுஇ கொழும்பில் ஒரு வீடு மற்றும் இலண்டனில் ஒரு வீடு இருப்பவர்களிற்கு தெரியாது. இதன் காரணமாகவே அழிவடைந்த வீட்டிற்கு ஐம்பது இலட்சம் ரூபாவும்இ அதற்கு மேலேயும் வழங்குவதற்கு தீர்மானித்தோம்.

மேலும் டித்வா சூறாவளி காலத்திலேயே சம்பளத்தையும் அதிகரித்திருந்தோம். அத்தோடு மலையக தொழ்லாளர்களுக்கு 200 ரூபாய் அரசாங்கம் வழங்கியதன் ஊடாகவே 1700 ரூபாய் வழங்கப்படவுள்ளது. குறிப்பாக எங்களுடைய நாட்டை நாங்கள் தான் கட்டியெழுப்ப முடியும் மாறாக வேறு யாரும் அதனை செய்ய முடியாது. இலங்கையை கட்டியெழுப்ப யாருமே பெரிய அளவில் உதவி செய்ய போவதில்லை.

சில நாடுகள் குறிப்பிட்டளவு நிதியினை வழங்கிய போதும் முழு நாட்டையும் கட்டியெழுப்ப போதுமானதாக இருக்காது. நீங்கள் அனைவரும் இணைந்து 75 வருடகால மோசடியான அரசினை இல்லாது செய்துள்ளீர்கள். அத்தோடு நான்கு திசையை உள்ளடக்கிய நல்ல கட்டமைப்பை கொண்ட அரசாங்கத்தை உருவாக்கியுள்ளீர்கள்.

அதிகளவான மக்கள் எங்கள் அரசின் மீது ஆர்வமாக உள்ளனர். ஆனால் இவ் அரசை யார் எதிர்க்கின்றனர். குறிப்பாக கடந்த காலத்தை போல் சௌகரியமாக இருக்க முடியாத ராஜபக்ஷக்கள்இ ஐக்கிய மக்கள் சக்தியினரே. குறிப்பாக ஒரு குடும்பமே ராஜபோக வாழ்க்கை வாழ்ந்தார்கள் அது தற்போது முடியாது உள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியினர் பொய் கூறுவதோடு எங்களையும் பேசுகின்றார்கள். இவ்வாறானவர்களிற்கு உடந்தையாக இருந்த சிறு தொகை அதிகாரிகளும் எதிர்க்கின்றனர். இருந்த போதும் இனவாதம் இல்லாமல் இருக்க வேண்டும் என நினைப்பவர்கள் எமக்கு எதிராக இல்லை.

கொழும்பு, காலியிலும், பருத்தித்துறையிலும் இருந்து வலைப்பந்து விளையாட்டு போல் இனவாத விளையாட்டை விளையாடுவார்கள். இதன் மூலமாக அவர்களிற்கு ஒரு செய்தி உள்ளதுடன், அவர்களிடம் ஏமாந்து வாக்கும் போடப்படும்.

தெற்கில் இனவாதம் இல்லாமல், வடக்கிலும் இனவாதம் இருக்காது. ராஜபக்ஷ சரியான பசியுடன் உள்ளார். அவர்களின் உணவு இல்லை. கம்மன்பில, வீரவன்ச ஆகியோருக்கு இனவாத உணவு இல்லாமல் மெலிந்துள்ளனர்.

அமைச்சு பதவி இன்றி வாக்குகள் இன்றி தற்போது இவர்கள் இனவாதம் எங்குள்ளது என தேடுகின்றனர். இவர்களை போன்றவர்களே யாழிலும் உள்ளதுடன், அவர்களிற்கு அமைச்சு பதவி இல்லாமல் போய்விட்டது. அத்தோடு வடக்கில் உள்ள இவர்களும் இனவாதத்தை தேடி திரிகின்றனர். ஆனால் நாங்கள் அவர்களுக்கு இனவாத உணவை வழக்கம்போவது இல்லை.

அவர்களிற்கு இரண்டை தெரிவதற்கான சந்தர்ப்பம் தற்போது உள்ளது. ஒன்று இனவாதம் இல்லாமல் அப்படியே இல்லாமல் போவது. இரண்டாவது இந்த நாட்டிலே ஒற்றுமையாக ஒன்றாக சேர்ந்து பயணிக்கத்தக்க வகையில் அவர்கள் செய்வதன் மூலம் அவர்கள் தப்பிக்கொள்வார்கள். தற்போது இனவாத செயற்பாட்டை தேடுபவர்கள் இரு பக்கமும் இருந்து குறைக்கின்றனர் என தெரிவித்தார்.


Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All