
admin
May 20, 2026
உள்ளூர்
அதிவேக வீதிகளின் வருமானம் மற்றும் பராமரிப்புச் செலவு விபரங்கள் வெளியீடு!

இலங்கையிலுள்ள அனைத்து அதிவேக வீதிகளினதும் 312.57 கிலோமீற்றர் தூரத்திற்கான வருடாந்த பராமரிப்புச் செலவு 5,180.90 மில்லியன் ரூபாய் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடக அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று (20) பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் பிமல் ரத்நாயக்க இதனைத் குறிப்பிட்டார்.
அதற்கமைய, அதிவேக நெடுஞ்சாலைகளின் பராமரிப்புச் செலவு விபரங்கள் பின்வருமாறு:
E1 - தெற்கு அதிவேக வீதி: கொட்டாவையிலிருந்து மத்தல வரையிலான 200.45 கிலோமீற்றருக்கான மொத்தச் செலவு - 2,024.5 மில்லியன் ரூபாய்.
E2 - வெளிவட்ட வீதி: கொட்டாவையிலிருந்து கெரவலபிட்டிய வரையிலான 28.86 கிலோமீற்றருக்கான செலவு - 767.6 மில்லியன் ரூபாய்.
E3 - கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக வீதி : பேலியகொடவிலிருந்து சீதுவை வரையிலான 25.8 கிலோமீற்றருக்கான செலவு - 834.1 மில்லியன் ரூபாய்.
E4 - மத்திய அதிவேக வீதி: மீரிகமயிலிருந்து குருநாகல் யக்கபிட்டிய வரையிலான 40.91 கிலோமீற்றருக்கான செலவு - 531.00 மில்லியன் ரூபாய்.
E5 - தெற்கு அதிவேக வீதி நீடிப்பு: அந்தரவெவவிலிருந்து ஹம்பாந்தோட்டை வரையிலான 16.55 கிலோமீற்றருக்கான செலவு - 1,022.70 மில்லியன் ரூபாய்.
இதேவேளை, 2025 ஆம் ஆண்டின் ஆரம்பம் முதல் 2025 டிசம்பர் 31 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் அனைத்து அதிவேக வீதிகளிலிருந்தும் கிடைத்த மொத்த வருமானம் 16,330.14 மில்லியன் ரூபாய் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
அதன்படி, வருமான விபரங்கள் பின்வருமாறு:
தெற்கு அதிவேக வீதி வருமானம்: 5,031.28 மில்லியன் ரூபாய்.
வெளிவட்ட வீதி வருமானம்: 4,347.32 மில்லியன் ரூபாய்.
கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக வீதி வருமானம்: 3,355.12 மில்லியன் ரூபாய்.
தெற்கு அதிவேக வீதி நீடிப்பு வருமானம்: 2,019.45... மில்லியன் ரூபாய்.
மத்திய அதிவேக வீதி வருமானம்: 1,576.97 மில்லியன் ரூபாய்.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All






