Search

Rebecca

Sep 9, 2025

உள்ளூர்

ரொஹான் ஒலுகலவிற்கு புதிய பதவி

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற நடவடிக்கை தடுப்புப் பிரிவின் மேற்பார்வை பிரதானியாக உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் ஒலுகல நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அண்மையில் இந்தோனேசிய பொலிஸாரின் உதவியுடன் ஐந்து திட்டமிடப்பட்ட குற்றக்குழு உறுப்பினர்களை ஜகர்த்தாவில் வைத்து கைதுசெய்யும் நடவடிக்கையில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் ஒலுகல முக்கிய பங்கு வகித்திருந்ததாக பொலிஸ் தெரிவித்துள்ளது.

மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவின் பணிப்பாளராகவும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் ஒலுகல பதவி வகித்து வந்துள்ளார்.


Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All