
admin
May 25, 2026
உள்ளூர்
தங்கப் பிணை கடனில் மத்திய வங்கியின் புதிய உத்தரவு.

தங்கப் பிணை கடன்களுக்கான அதிகபட்ச கடன்-மதிப்பு (LTV) விகிதத்தை 70% ஆகக் கட்டுப்படுத்தி இலங்கை மத்திய வங்கி புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
நிதித் தொகுதியின் ஸ்திரத்தன்மையை வலுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்கவினால் வெளியிடப்பட்டுள்ள இந்த புதிய கட்டளை, இன்று (25) முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.
இதன்படி, உரிமம் பெற்ற அனைத்து வர்த்தக வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள், தங்கப் பிணையின் அடிப்படையில் வழங்கும் கடன்கள் அதன் மதிப்பில் 70% ஐத் தாண்டாதிருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
இந்த உத்தரவு அடகு வைப்பு வசதிகள், தங்கக் கடன்கள் உள்ளிட்ட அனைத்து வகையான தங்கப் பிணைக் கடன்களுக்கும் பொருந்தும் என மத்திய வங்கி தெளிவுபடுத்தியுள்ளது.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All






