Search

Rebecca

Feb 19, 2026

உள்ளூர்

நாமலுக்கு எதிரான வழக்கு ஏப்ரல் 2ஆம் திகதி விசாரணைக்கு

க்ரிஷ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 02 ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று (19) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நதீ அபர்ணா சுவந்துருகொட முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, பிரதிவாதியான நாமல் ராஜபக்ஷ நீதிமன்றில் ஆஜராகியிருந்தார்.

அதனைத் தொடர்ந்து, குறித்த வழக்கை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 02 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு அழைப்பதற்குத் திகதி நிர்ணயிக்கப்பட்டது.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All