Search

Rebecca

Jan 6, 2026

உள்ளூர்

மட்டக்களப்பில் மீண்டும் பருவமழை

வடகீழ் பருவப் பெயர்ச்சி மழை வீழ்ச்சி மட்டக்களப்பு மாவட்டத்தில் மீண்டும் பொழியத் துவங்கியுள்ளது.

கடந்த வருடம் இறுதி வரையில் பெய்து வந்த மழை வீழ்ச்சி கடந்தவாரம் சற்று ஓய்ந்திருந்த நிலையில் இன்று அதிகாலை முதல் பலத்த மழை பெய்து வருவதை அவானிக்க முடிகின்றது.

இந்நிலையில் மட்டக்களப்பு நகரில் 39.5 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும், நவகிரிப்பகுதியில் 55 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும், தும்பங்கேணிப்பகுதியில் 36 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும், உன்னிச்சைப்பகுதியில் 33 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும், உறுகாமம் பகுதியில் 26 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும், மைலம்பாவெளி பகுதியில் 31 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும், வாகரை பகுதியில் 38 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும், கல்முனை பகுதியில் 19.5 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும், செவ்வாய்கிழமை காலை 8.30 மணிவரையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

கடந்த 2025 வருடம் முழுவதும் 1863.4 மழைவீழ்ச்சி கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், மட்டக்களப்பு வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All