Dec 10, 2025
உலகம்
அவுஸ்திரேலியாவில் 16 வயதிற்கு உட்பட்டோர் சமூக ஊடகம் பயன்படுத்த தடை
உலகம் முழுவதும் சமூக ஊடகங்களை அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்தி வருகின்றனர். சமூக ஊடகத்தை குழந்தைகளும் பயன்படுத்துவதால் அவர்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. உடல்நலம் மன நலம் உள்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.
இதனிடையே அவுஸ்திரேலியாவில் 16 வயதிற்கு உள்பட்ட சிறுவர்,சிறுமியர் பேஸ்புக்,டுவிட்டர்,இன்ஸ்டாகிராம், டிக்டாக் உள்பட அனைத்து வகையான சமூக ஊடகத்தை பயன்படுத்த தடை விதிக்க அந்நாட்டு அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி
கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டது. மேலும் சிறுவர் சிறுமியரின் சமூக வலைதள கணக்குகளை நீக்கவில்லையென்றால் சமூக ஊடக நிறுவனங்களுக்கு ரூ. 300 கோடி வரை அபராதம் விதிக்கவும் மசோதா நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் அவுஸ்திரேலியாவில் 16 வயதிற்கு உள்பட்ட சிறுவர் சிறுமியர் சமூக ஊடகங்களை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த நடவடிக்கை அவுஸ்திரேலியா சிறுவர் சிறுமியரின் வாழ்வை மாற்றும் சீர்திருத்தமாக இருக்கும் என்று அந்நாடு பிரதமர் அல்பெனீஸ் தெரிவித்துள்ளார்.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All







