
Rebecca
Jan 17, 2026
உள்ளூர்
பௌத்த மதகுருக்களின் கைது! அதுரலியே ரத்தன தேரர் கருத்து

திருகோணமலை கடற்கரையோர புத்தர் சிலை விவகாரம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பௌத்த மத குருக்களை சந்திப்பதற்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரத்தன தேரர் வருகை தந்திருந்தார்.
குறித்த சந்திப்பின் பின்னராக ஊடகங்களுக்கு அவர் கருத்து தெரிவிக்கையில், குறித்த பௌத்த மதகுருக்களின் கைதானது ஒரு திட்டமிட்ட செயலாக பார்க்க வேண்டும் என இதன்போது அவர் குறிப்பிட்டிருந்தார்.
நான் இந்த அரசாங்கத்திற்கு சொல்ல விரும்புவது இவ்வாறான செயற்பாடுகள் மூலமாக இந்த அரசாங்கமானது மிகுந்த நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது எனவும், இதன்மூலமாக வீணாக அமைதியாக இருக்கும் நாட்டில் இனவாதம் மதவாதத்தினை ஏற்படுத்தி மீண்டும் ஒரு குழப்ப நிலையை ஏற்படுத்தவே இந்த அரசாங்கம் முனைவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All






