
Rebecca
Jan 1, 2026
உள்ளூர்
முதல் நாள் சத்திய பிரமாணம் நிகழ்வு

மலர்ந்துள்ள புதுவருடத்தின் (2026) முதல்நாள் அனைத்து அரச திணைக்களங்களிலும் மேற்கொள்ளப்படும் அரச உத்தியோகத்தர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.
அம்பாறை மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் சத்தியப்பிரமாணம் செய்து 2026ஆம் ஆண்டுக்கான தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர்.
மாவட்ட செயலகத்தில் இன்று(1) காலை இந்நிகழ்வு அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்ரம தலைமையில் தேசியக் கொடியேற்றப்பட்டு ஆரம்பிக்கப்பட்டது.
சத்தியப்பிரமாண நிகழ்வில் உத்தியோகத்தர்கள் அனைவரும் புதிய ஆண்டிற்கான சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதுடன், புதுவருட வாழ்த்துக்களை பரிமாறி தமது கடமைகளை பொறுப்பேற்றனர்.





கல்முனை
2026ஆம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்று கல்முனை பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் ரீ.அன்ஸார் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது முதல்நாள் கடமைகளை ஆரம்பிக்கும் அரச சேவை சத்தியப்பிரமாண நிகழ்வும் இடம் பெற்றதுடன் நாட்டுக்காக உயிர் நீத்தவர்களுக்காகவும், பல்வேறு அனர்த்தங்களில் உயிரிழந்த உறவுகளை நினைவுகூர்ந்தும் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, உத்தியோகத்தர்கள் அனைவரும் கடமை உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
பிரதேச செயலாளர் இங்கு உரையாற்றுகையில், அரசாங்கத்தின் புதிய எண்ணக்கருக்களான வறுமையை ஒழித்தல், டிஜிடல் மயமாக்கல், க்ளீன் ஸ்ரீலங்கா ஆகிய எண்ணக் கருத்துக்களை உள்ளடக்கியதாக சிறப்புரை ஆற்றியிருந்ததுடன் இந்த வருடம் அனைவரது வாழ்வில் மிகுந்த சந்தோஷங்களையும் வளங்களையும் கொண்டுவரவேண்டுமென புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.
இதில் பிரதேச செயலக கணக்காளர் எம்.எஸ்.அமீர் அலி திட்டமிடல் உதவிப் பணிப்பாளர்.ஏ.எல்.ஏ.
மஜீத் நிருவாக உத்தியோகத்தர் ஏ.சி.எம்.பளீல் சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஏ.சி.அன்வர் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர் கே.எல்.யாஸீன் பாவா உட்பட கிளைத் தலைவர்கள் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.


மண்முனை
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் 2026ஆம் ஆண்டுக்கான ஆரம்ப நிகழ்வு தவிசாளர் மே.வினோராஜ்; தலைமையில் சபையின் செயலாளர் சு.சுபாறாஜன் அவர்களின் பங்குபற்றுதலுடனும் இன்று(01) ஆரம்பிக்கப்பட்டது.
நிகழ்வில் தேசியக்கொடி மற்றும் உள்ளுராட்சி கொடி என்பன ஏற்றபட்டதுடன் சத்தியப்பிரமாண நிகழ்வும் நடைபெற்றது. மேலும் நாட்டிற்காக உயிர் நீர்த்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு தவிசாளர் செயலாளரினால் சிறிய கருத்துரைகளும் இதன்போது ஆற்றப்பட்டன.
தவிசாளர் இதன்போது துகருத்துரைக்கும் போது, கடந்த வருடம் பிரதேச மக்களின் நலன் கருதி சிறப்பாக எமது சபையில் கடமையாற்றுகின்ற அனைத்து உத்தியோகத்தர்களும் செயற்பட்டிருந்தார்கள். அதற்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். என தெரிவித்தார்.
இதன்போது கருத்துரைத்த பிரதேச சபைச் செயலாளர், அரச உத்தியோகத்தர்களுக்கு 2026 ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும் பல சுற்று நிருபங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதற்கமைய செயற்படுமாறும்இ தவிசாளர் வெள்ள அனர்த்த காலத்தின் போது களத்தில் நின்று சிறப்பாக கடமையாற்றிமைக்காகவும் தமது நன்றியை தெரிவித்துக் கொள்வதாகத் தெரிவித்தார்.


காரைதீவு
காரைதீவு பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் 2026ஆம் ஆண்டின் கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வானது பிரதேச சபையின் தவிசாளர் சு.பாஸ்கரன் தலைமையில் இன்று (01 ) இடம்பெற்றது.
இதன்போது உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் சத்தியப்பிரமானம் எடுத்துக் கொண்டதுடன் தவிசாளரினால் விசேட உரை நிகழ்த்தப்பட்டது.
அத்துடன் அலுவலக நடவடிக்கைகள் சிறப்பாக ஆரம்பித்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


சம்மாந்துறை
2026ஆம் ஆண்டு புத்தாண்டின் முதல் நாளை முன்னிட்டு, சமூக ஒற்றுமை மற்றும் அமைதியை வலியுறுத்தும் வகையில் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் நான்கு மதங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சிறப்பு வழிபாட்டு நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வு சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.என். நிசாந்த பிரதீப் குமார அவர்களின் தலைமையில் இன்று (01) ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த நிகழ்வில் இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம் மற்றும் பௌத்த மதங்களைச் சேர்ந்த மதத் தலைவர்கள் கலந்து கொண்டு தத்தமது மத மரபுகளின்படி பிரார்த்தனைகளை நடத்தினர். சம்மாந்துறை பொலிஸ் நிலைய அதிகாரிகள், காவல்துறை பணியாளர்கள் மற்றும் இராணுவ உறுப்பினர்கள் இணைந்து இதில் பங்கேற்றனர்.
புதிய ஆண்டை அமைதி, சகோதரத்துவம் மற்றும் சமூக நல்லிணக்கத்துடன் ஆரம்பிக்கும் நோக்கில் இந்த நான்கு மத பிரார்த்தனை நிகழ்வு நடத்தப்பட்டதாக பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி அவர்கள் தெரிவித்தார். இந்நிகழ்வு மத நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒற்றுமையை வெளிப்படுத்தும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்ததாகப் பங்கேற்பாளர்கள் தெரிவித்தனர்.
புதிய ஆண்டில் சம்மாந்துறை பிரதேசத்திலும் நாடு முழுவதும் அமைதி, பாதுகாப்பு மற்றும் செழிப்பு நிலவ வேண்டும் என அனைவரும் இணைந்து பிரார்த்தித்தனர்.




Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All






