
admin
Mar 7, 2026
உள்ளூர்
அக்குரேகொட துப்பாக்கி சூடு சம்பவம் : மேலும் இருவர் கைது

நேற்று தலங்கம, அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த மேலும் இரு சந்தேக நபர்களை மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 39 மற்றும் 53 வயதுடைய இப்பாகமுவ மற்றும் மாகொல பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தற்போது வெளிநாட்டில் வசிக்கும் பாதாள உலகக் குழு உறுப்பினர் ஒருவரினால் வழங்கப்பட்ட பணத்தில் கொள்வனவு செய்யப்பட்ட பேருந்து ஒன்றின் மூலமே சந்தேக நபர் ஒருவரால் துப்பாக்கிதாரி அழைத்துச் செல்லப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All





