
janani
Apr 26, 2026
உள்ளூர்
இரண்டு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதியதால் விபத்து!

தம்புள்ளை - மாத்தளை பிரதான வீதியின் நாவுல, நாலந்த பகுதியில் இன்று காலை 9.20 மணியளவில் தனியார் பேருந்து ஒன்றும், இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்றுடன் ஒன்று மோதி பாரிய விபத்துக்குள்ளாகியுள்ளன.
விபத்தில் காயமடைந்த 11 பேர் நாலந்த பிரதேச வைத்தியசாலை மற்றும் மாத்தளை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில், சபாநாயகர் கண்டி வீதி வழியாக கொழும்பு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தார். இதன்போது விபத்தைக் கண்ட சபாநாயகர், உடனடியாகச் செயற்பட்டு காயமடைந்தவர்களைப் பேருந்துகளில் இருந்து வெளியேற்றவும், அவர்களை சிகிச்சைக்காக அனுப்பி வைக்கவும் நேரில் நின்று உதவி வழங்கியுள்ளார்.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All





