Search

admin

Mar 29, 2026

உள்ளூர்

குடாஓய பகுதியில் விபத்தில் 7 வயது சிறுவன் பலி!

வெல்லவாயவில் இருந்து தணமல்வில நோக்கி பயணித்த லொறி ஒன்று, எதிர்த்திசையில் வந்த மூச்சக்கர வண்டி ஒன்றின் மீது மோதியதில் கொட்டியாகல பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார்.

விபத்தின் போது முச்சக்கரவண்டியின் பின்னால் பயணித்த சிறுவன் பலத்த காயமடைந்து தணமல்வில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக எம்பிலிபிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அந்தச் சிறுவன் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் லொறி சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், குடாஓய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All