Search

Rebecca

Feb 16, 2026

உள்ளூர்

இந்திய – பாகிஸ்தான் போட்டியை முன்னிட்டு வந்த 25 ஜெட் விமானங்கள்

உலகக்கிண்ண இருபதுக்கு-20 (World T20) தொடரின் கீழ் நேற்று கொழும்பில் நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் போட்டியைப் பார்ப்பதற்காக உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் ஏராளமான கிரிக்கெட் ரசிகர்கள் 15 விசேட தனியார் ஜெட் விமானங்களில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

இந்த விமானங்கள் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பல நாடுகளிலிருந்து நேற்று முன்தினம் முதல் வருகை தந்திருந்தன.

பாகிஸ்தான் விளையாட்டுத்துறை அமைச்சர், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ICC) தலைவர் திரு. ஜே. ஷா (Jay Shah) மற்றும் பல கோடீஸ்வர தொழிலதிபர்களும் இந்த விமானங்களின் மூலம் வருகை தந்திருந்தனர்.

தற்போது அவர்கள் அனைவரும் தாங்கள் வந்த விமானங்களிலிருந்து வெளியேறிச் சென்றுள்ளனர்.


Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All