
janani
Apr 4, 2026
உள்ளூர்
1990 சுவசெரிய அலுவலகம் அதிகாரப்பூர்வமாக திறந்து வைப்பு!

1990 சுவசெரிய அவசர நோயாளர் காவு வண்டி சேவையின் புதிய அலுவலகம் இன்று கொழும்பில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் இந்தத் திறப்பு விழா நடைபெற்றது.
1990 நோயாளர் காவு வண்டி சேவையின் செயல்திறனை மேம்படுத்துவதும், பொதுமக்களுக்கு மிக விரைவான அவசர மருத்துவச் சேவைகளை வழங்குவதுமே இந்தப் புதிய அலுவலகத்தை நிறுவியதன் முக்கிய நோக்கமாகும்.
இதன் மூலம் நோயாளர் காவு வண்டி செயற்பாடுகள், ஒருங்கிணைப்புப் பணிகள் மற்றும் அவசர மருத்துவப் பதிலளிப்புச் சேவைகள் (Emergency Medical Response) மேலும் வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All





