Search

janani

Apr 9, 2026

உள்ளூர்

சில பகுதிகளில் 12 மணிநேர நீர்வெட்டு

நிலவும் வறட்சியான வானிலை காரணமாக இன்று மற்றும் நாளை ஹோமாகம, பெலன்வத்தை பகுதிகளில் 12 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.


இதன்படி, ஹோமாகம பகுதியில் இன்று இரவு 8.00 மணி முதல் நாளை காலை 8.00 மணி வரை நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.


ஹோமாகம நகரம், வேகந்த வீதி, பின்கெத்த வீதி, வலவ்வ வீதி, கெமுணு மாவத்தை, அத்துருகிரிய வீதி, கலவிலவத்தை, நியந்தகல, மஹகடுவான, மாகம்மன, தெனிய மற்றும் தியகம பல்கலைக்கழகம் ஆகிய பகுதிகளுக்கு இந்த நீர்வெட்டு அமுலாகும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை குறிப்பிட்டுள்ளது.


Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All